Saturday, September 14, 2024

தங்கலான், அந்தகன், ரகுதாத்தா படங்களை தொடர்ந்து ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது டிமான்ட்டி காலனி 2!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திகில் கதையை மையமாக வைத்து 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும், இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வெளியீடு குறித்த தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், டிமாண்டி காலனி – 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் விக்ரமின் தங்கலான், பிரசாந்த்-ன் அந்தகன், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படங்களும் ஆகஸ்ட் 15ல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News