Saturday, September 14, 2024

ஜெயம்ரவியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பிரபல இயக்குனர்… தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி தற்போது “பிரதர்,” “ஜீனி,” மற்றும் “காதலிக்க நேரமில்லை” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். “பிரதர்” திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளதுடன், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

அதன்பின், “காதலிக்க நேரமில்லை” மற்றும் “ஜீனி” ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம் ரவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக ஜெயம் ரவி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, கார்த்திக் சுப்பராஜ் “சூர்யா 44” திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்தவுடன், ஜெயம் ரவியின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News