Tuesday, September 17, 2024

சூப்பர் ஹ்யூமனாக மாறிய சத்யராஜ்… விரைவில் திரைக்கு வரவுள்ள ‘வெப்பன்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படம் “வெப்பன்.” இந்த படம் மே மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் குகன் படத்தை பற்றி பேசும் போது, “சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ உருவாகியுள்ளது. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய ஆக்ஷன் கதை இதில் இருக்கிறது,” எனக் கூறினார்.

மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.மன்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷின் ஆதரவு இன்றி இந்தப் படம் சாத்தியமாகாது.”சத்யராஜ் தனது முதல் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் எனக்கும் ஊக்கமாக இருந்தது. நடிகர் வசந்த் ரவியின் நடிப்பு கண்டிப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். படத்தில் நீங்கள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இருக்கின்றன” என்றார்.

“இந்த படத்தில் ஸ்டைலான, அதேசமயம் சக்திவாய்ந்த வில்லனாக நடித்துள்ள ராஜீவ் மேனன் சார், தன்யா ஹோப்பின் நடிப்பு பாராட்டுகளை பெறுவது உறுதி. இப்படத்தை சிறப்பாக உருவாக உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி” என இப்படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன் குறிப்பிட்டார்.

மில்லியன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பிரபு ராகவ் செய்ய, படத்தொகுப்பு கோபி கிருஷ்ணாவும், கலை அமைப்பு சுபேந்தர் பி.எல்-ம் மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News