Saturday, September 14, 2024

சினிமாவை இவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்… அமீர் பரபரப்பு பேச்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், திரைப்பட எடிட்டர்கள் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமீர்,

பருத்தி வீரன் படத்தை 13 முறை எடுத்து, அதில் ஒன்றை ஒப்புக் கொண்டேன். அதுதான் எடிட்டரின் கடின உழைப்பு. படப்பிடிப்பின் போது உதவி இயக்குநருடன் சண்டைகள் ஏற்படும், படம் முடிந்த பிறகு எடிட்டருடன் அதிக சண்டைகள் ஏற்படும். ஆனால், எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். படம் வெற்றி பெறுமா என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை மெருகேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்றார்.

அவர் தொடர்ந்து பேசினார், “இன்று தமிழ் சினிமா அனாதையாக உள்ளது. தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு தான் உள்ளது. வருடத்தில் 365 நாட்களில், ஆண்டுக்கு 250 படம் வெளியாகிறது. அதாவது, ஒன்றரை நாளுக்கு ஒரு படம் வெளியாகிறது. டிவி, செல்போன், ஓடிடி தளங்களிலும் படம் வெளியீடு அடைகிறது. இப்படி இருக்கும் போது, ரசிகர்கள் எவ்வளவு படங்களைப் பார்ப்பார்கள்? இதனால் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்பதால், பான் இந்தியா திரைப்படம் என எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களைப் பிடித்து, படங்களை எடுத்து அங்கேயே இருந்து விடுவேன். எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. க்யூப் நிறுவனம் தொடங்கும்போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். அவர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை. மேலும், தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா சிக்கி உள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும் என்றார் அமீர்.

- Advertisement -

Read more

Local News