Saturday, September 14, 2024

கொடி ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்… த.வெ.க கொடி எப்போது அறிமுகம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை செப்டம்பர் 22ம் தேதி சென்னை பனையூரில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இன்று மஞ்சள் நிறத்தில் விஜய் உருவம் பொறித்த கொடியை கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற தனது ரசிகர் மன்றத்தை, கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பே கட்சியை துவங்கினாலும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என அறிவித்தார். தனி கட்சி துவங்கிய பிறகு, விஜய் தனது நடிப்பு பணிகளை முடித்து, முழுநேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, செப்டம்பர் 22ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டின்போது கட்சி கொடியை அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே புதிய கட்சி கொடியை செப்டம்பர் 22ம் தேதி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கொடிக் கம்பம் பனையூரில் நடப்பட்டு, இதற்கான பணிகள் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று(ஆக., 19) கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்து, ஒத்திகை நிகழ்ச்சியாக கட்சி கொடியை ஏற்றினார். அதில் மஞ்சள் நிறத்தில் மத்தியில் விஜய் உருவம் பதித்த கொடி இடம் பெற்றிருந்தது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கொடியா என தெரியவில்லை. இன்றைய ஒத்திகையின் போது, விஜய் கட்சிக்கான கொள்கைப் பாடலையும் வெளியிட்டார். இந்த பாடலை விஜய் எழுதியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News