லிப்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த கவின் அடுத்ததாக ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் தொடர்பான புரமோஷன்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளின் வெளியாகிறது. நேற்று அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. தளபதி விஜய் போலவே கவின் நடந்து வருவதாகவும் ரசிகர்களை பார்த்து கை அசைப்பதாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் ட்விட்டர் பக்கத்தில் கிளப்பி விட்டனர் ரசிகர்கள்.
ஸ்டார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினிடம் ஒரு படம் வெற்றி அடைந்த உடன் அதிகமாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது அது பற்றி உங்களின் கருத்து என்ன என பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு கவின் எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரின் மார்க்கெட் தெரியாமல் சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கமாட்டார்கள். நான் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது ஆரம்பத்தில் என் சம்பளம் வெறும் 1000 ரூபாய் தான். அந்த சீரியல் முடிக்கும் போது என்னுடைய சம்பளம் 6000 ஆக மாறியது. ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு நீங்கள் சென்றால் கூட சம்பள உயர்வு எதிர்பார்க்கிறீர்களா மாட்டீர்களா என நெத்தியடியாக ஒரு பதிலை கூறினார்.
அதோபோல் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக பல மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இன்னமும் அந்த படம் எப்போது துவங்கும் யார் ஹீரோ என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அது தொடர்பான கேட்க்கப்பட்ட கேள்விக்கு , ஜேசன் சஞ்சய் என்னை வந்து சந்தித்து கதை சொன்னது உண்மைதான் தான் ஆனால் நான் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறியதால் அவரும் டிஸ்கஷன் செய்து விட்டு வருவதாக சொன்னார்.அதற்கு பிறகு இருவரும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.