Tuesday, July 2, 2024

கல்கி 2898 AD படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள கல்கி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது கல்கி திரைப்படம்.

குருசேத்திர போரில் அஸ்வத்தாமா உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். இதனை கண்டு கொதித்த கிருஷ்ணர், அவனுக்கு சாகா வரத்தை அளித்து, “அந்த குழந்தையாக தானே அவதரிப்பேன். அப்போது என்னை நீ காப்பாற்ற வேண்டும். அது வரை, இந்த பூமியில் நீ வேதனையோடு வாழ்” என்று சாபம் கொடுத்து சென்று விடுகிறார்.

படம் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான எதிர் காலத்திற்கு செல்லுகிறது. அங்கு சுப்ரீம் பெரிய காம்ப்ளக்சை நிறுவி, அதில் பல கர்ப்பிணி பெண்களை உருவாக்கி, அவர்களிடம் இருந்து சீரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். அங்கு சுமதியும் மாட்டிக்கொண்டு இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் அவள் தன்னுடைய குழந்தைக்காக அங்கிருந்து தப்பித்து, உலக மாற்ற விடுதலைக்காக காம்ப்ளக்சிற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கும் ஷம்பாலா கும்பலிடம் தஞ்சம் அடைகிறாள். ஒரு கட்டத்தில் சுமதி வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அந்த கடவுள் என தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே கல்கி படத்தின் கதை.

படத்தின் முதல் பலம் படத்தின் கிராஃபிக்ஸ். காம்ப்ளக்ஸ், அதில் இருக்கும் விஷயங்கள் என அனைத்தையும் பெரும் உழைப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியையும் செதில், செதிலாக செதுக்கி இருக்கிறார்கள். இரண்டாவது படத்தின் பின்னணி இசை. சலிப்பு தட்டும் ஒவ்வொரு காட்சியையும் இரு பக்க தோள் கொடுத்து, சுவாரசியமாக்க முயன்று இருக்கிறார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தின் கலை இயக்கம், வாயை பிளக்க வைக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திரைக்கதையில் துளி கூட சுவாரசியம் இல்லாத காரணத்தால் கல்கி வைரமாக ஜொலிக்காமல், வெறும் கல்லாக உருண்டு கிடக்கிறது. படத்தில் கமல், அமிதாப், தீபிகா தொடங்கி விஜய் தேவர கொண்டா வரை அவ்வளவு நட்சத்திரங்கள். ஆனால் எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.

படத்தின் ஹீரோ பிரபாசை வழக்கம் போல பட்ஜெட்டிற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவருக்கு புஜ்ஜி என்ற கார்.. அதற்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கும் கீர்த்தியின் குரல் கேட்க நன்றாக இருந்தது. மஹாபாரத கதை, நட்சத்திர பட்டாளம், பிரமாண்ட கிராஃபிக்ஸ் என அனைத்தும் கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்ற படமாகவே கொடுத்து இருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். இவ்வளவு உழைப்பும் வீண் போனதா என்றால் அப்படி சொல்ல இயலாது. நிச்சயம் புதுவிதமான திரைக்கள அனுபவத்தை காண ஒருமுறை பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News