விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த ’96’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பிரேம் குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் கார்த்தியின் 27வது படமாகும். இதற்கு ‘மெய்யழகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் செப்.27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இன்று இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘நான் போகிறேன்’ மற்றும் ‘யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.