பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண், ஜுங்கா போன்ற படங்களில் நடித்தார்.


தமிழ் படங்களை நம்பிய மடோனா செபாஸ்டியனின் தமிழ் படங்கள் சரியாக போகவில்லை, மேலும் மலையாள படங்களிலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.



கடந்த ஆண்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில், விஜய்யின் தங்கையாக நடித்தார். ‘நான் ரெடி தான்’ பாடலில் விஜய்யுடன் நடனம் ஆடி அசத்தியிருந்தார். தற்போது, அவர் வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.