Saturday, July 13, 2024

கங்குவா திரைப்படம் வேட்டையன் படத்தோடு மோத வரவில்லை… மனம் திறந்த‌ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேலின் இயக்கத்தில்‌‌ உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் இப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகுமா அல்லது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகுமா என தெரியாமல் ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. அதேசமயம் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ல் ஆயூதபூஜையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஞானவேல் ராஜாவிடம் வேட்டையனோடு கங்குவா திரைப்படத்தை ரிலீஸ் செய்வது குறித்து ஒரு கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த ஞானவேல் ராஜா இதைப்பற்றி நானே சொல்ல வேண்டும் என நினைத்தேன்.தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. வேட்டையன் படத்தின் டார்கெட் தீபாவளி. அதனால் தீபாவளியை டார்கெட் செய்து அவர்கள் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதியில் எந்த ஒரு படமும் இதுவரை பிளான் செய்யவில்லை.அதனால் கங்குவா படத்தை அன்று வெளியிட முடிவு செய்தோம். அதற்கு மேலாக என்னுடைய பிறந்த நாளை விட ரஜினியின் பிறந்தநாளுக்கு தான் நான் கோயிலுக்கு சென்று 108 முறை கோயிலை சுற்றி வருவேன்.

அந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்படி இருக்கும்போது எப்படி சார் ரஜினி படத்தோடு  இப்படத்தை மோத விடுவேன் என்றவாறு பேசியுள்ளார்.ஆனால் சோசியல் மீடியாவில் இப்படியான செய்தி வருகிறது என்று கேள்வி கேட்டப்போது அவர்கள் இதை அவர்களது கன்டென்டுகாக இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் என ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News