
“விஸ்வாசம்” படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார் அனிகா. அவர் “நானும் ரவுடிதான்”, “மிருதன்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளியான “PT Sir” திரைப்படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அனிகா, மும்பையில் ஒரு செருப்பை பார்த்ததாகவும் அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். 6 இன்ச் ஹீல்ஸ் கொண்ட அந்த செருப்பின் மீது தீராத ஆசை இருப்பதாக, அதை வாங்க வேண்டும் என, அதன் விலை 1 லட்சம் ரூபாய் என்றும் அவர் கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.