விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் புதிய தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பெங்களூரில் அமைந்துள்ள கே.வி.என் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையில், இப்படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அந்த அப்டேட் போஸ்டரில், விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை வினோத் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், வெற்றியை குறிக்கும் தீபத்தை ஏந்தும் வடிவில் போஸ்டரை வடிவமைத்துள்ளனர். இதோடு, ‘ஜனநாயகத்திற்கான ஒளி விளக்கு’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால், இந்த படம் அரசியல் சார்ந்தது இருக்கலாம் என்று கருத்து உருவாகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
விஜய், தனது 69வது படத்துடன் அரசியலுக்கு செல்ல உள்ளதால், இப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதனாலேயே இப்படத்தின் போஸ்டர் கூட அதனை எதிரொலிக்கும் விதமாக இருப்பதாக பேசப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த முக்கியமான தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.