மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனது கணவரான நடிகர் திலீப்பை பிரிந்த பிறகு மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ என்ட்ரியில் பல மொழிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர, ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
VETTAIYAN
தமிழில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொல்வது நயன்தாராவை குறிக்கின்றது. சமீப காலமாக, மலையாள ஊடகங்கள் மஞ்சு வாரியரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளன.இதுகுறித்து தனது வருத்தத்தை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர், “என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். அந்த வார்த்தையைக் கேட்கும்போது, தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னை இப்படி அழைப்பதால், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விவாதங்கள் நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார்.