Saturday, September 14, 2024

இந்தியன் 2 திரைப்படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டதா? #INDIAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து நேற்று முன்தினம் வெளியான படம் ‘இந்தியன் 2’. இந்தப் படம் மொத்தம் மூன்று மணிநேரம் ஓடக்கூடியதாக தணிக்கை பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் அதன் நீளம் அதிகமாக இருப்பதாகவும், சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கலாம் என்றும் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.

இதனால், படத்தின் நீளம் இருபது நிமிடங்கள் வரை குறைக்கப்பட உள்ளது என்று நேற்று மாலை முதல் ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இதேபோல குறைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்த பெரிய படத்திற்கு விமர்சனங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நீளக் குறைப்பு நடக்குமா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News