Saturday, July 13, 2024

இந்தியன் 2ல் காத்திருக்கும் சஸ்பென்ஸ்… கிளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனர் ஷங்கர் செய்யப்போகும் மந்திரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான பிரம்மாண்ட ப்ரோமோஷன்களில் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா என பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது கமல்ஹாசனுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையேயான மோதல்கள் ஏற்படும் என்றும், இந்தியன் 3 படத்தில் சேனாபதியின் அப்பா கதாபாத்திரத்தை காட்டவுள்ள நிலையில், அதுகுறித்த க்ளிம்ப்ஸ் காட்சியை வெளியிடுவார்கள் எனக் கூறுகின்றனர்.

அதேபோல் விடுதலை படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் காட்சிகளை க்ளிம்ப்ஸாக காட்டியதை போல, இந்தியன் 2 படத்தின் இறுதியில் போஸ்ட் கிரெடிட்ஸ் காட்சிகளாக இந்தியன் 3 படத்தின் காட்சிகளும் வரும் என்றும் நிச்சயம். அதை பார்த்துவிட்டால் இந்தியன் 3 படத்திற்கான எதிர்பார்ப்பும், இந்தியன் 2 படத்திற்கான வரவேற்பும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News