Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அதுக்குள்ள ஷூட்டிங் ஓவரா? டிராகனாக பறக்கும் பிரதீப்… #DRAGON

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் பிரதீப் ரங்கநாதன், கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி இடம்பெற்றுள்ளார். அடுத்ததாக, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளார்.கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் யோகிபாபு நடித்த அந்த படம் அவருக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

அதன் பின்னர், இவானா மற்றும் யோகிபாபுவுடன் இணைந்து அவர் இயக்கிய லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழில் பிரதீப்பின் மார்க்கெட் மதிப்பை உயர்த்தியது. இவரின் நடிப்புத்திறனைப் பார்த்து, இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள எல்ஐசி படத்தில் நடித்துள்ளார். இதன் பின்னர், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் புகழ்பெற்ற அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் டிராகன் படத்தில் அவர் நடித்து வருகிறார். அண்மையில், இந்த படத்தின் டைட்டில் பிரமோ நெருப்புடன் வேற லேவலாக வெளியிடப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜையில் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் நேற்று நிறைவு செய்தனர். விரைவில், படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News