Tuesday, November 19, 2024

வெளிநாட்டில் தயாரான தமிழ் திரைப்படம்… ‘தி வெர்டிக்ட்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அக்னி எண்டர்டெயின்மெண்ட் அதன் சென்னை கிளையுடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் முழுவதும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டினில் படமாக்கப்பட்டது.அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதலாவது திரைப்படமான “தி வெர்டிக்ட்” ஒரு கோர்ட்ரூம் டிராமா மற்றும் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இப்படத்தை கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார்.இவர்கள் இருவரும் டெக்சாஸில் குடியிருப்பவர்கள். இந்த படத்தை முழுமையாக ஆஸ்டின், டெக்சாஸ் நகரத்தில் உருவாக்கிய முதல் சர்வதேச இந்திய திரைப்படம் இதுவாகும். படம் முழுவதும் 23 நாட்களில் படமாக்கப்பட்டது.

முழுமையாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் படமாக்கப்பட்ட இந்த சினிமா, சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில், சில அமெரிக்கக் கலைஞர்களுடன் நடித்துள்ளனர்.

அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். “தி வெர்டிக்ட்” படத்தின் முதல் பார்வையை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் வெளியிட்டனர்.

- Advertisement -

Read more

Local News