Monday, November 18, 2024

விடுதலை 2 படம் வெளியாவதில் ஏதேனும் சிக்கலா? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடுதலை 2 படக்குழு தற்போது அதிகரிக்கும் பொருட்செலவு மற்றும் படத்தின் நீளம் போன்ற சிக்கல்களில் சிக்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படம் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியானது. இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான ட்ரெய்லரும் இணைக்கப்பட்டது.  

இரண்டாம் பாகத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலம் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் படக்குழு சிக்கலில் உள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்; அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அவர்களுக்கு வேகம் தேவைப்படுகிறது.  

மேலும், படத்தின் தற்போதைய நீளம் 4 மணி நேரமாக உள்ளது. தற்போது படமாக்கப்பட்டு வரும் காட்சிகளையும் இணைத்தால், நேரம் மேலும் அதிகரிக்கும் என்ற கவலையில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனால், திரையரங்கில் 2:30 மணி நேர படமாக வெளியிட்டு, முழுமையான படத்தை ஓடிடி வெளியீட்டுக்கு கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். முதல் பாகத்தில் ரயில் கவிழும் காட்சியை படமாக்கிய இடத்திலேயே இரண்டாம் பாகத்துக்காக ஒரு கிராமத்தை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். 

- Advertisement -

Read more

Local News