Saturday, September 14, 2024

வாவ் என சொல்லும் அளவிற்கு இந்ந படத்தில் ஒரு சீன் இருக்கிறது… ‘தக் லைஃப் ‘ படம் குறித்து அபிராமி சொன்ன சீக்ரெட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் திட்டம் “தக் லைஃப்”. இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் மற்றும் மணிரத்னம் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் நடிகை அபிராமி சமீபத்திய பேட்டியில், கமல் ஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரிடமிருந்து மற்ற இயக்குநர்கள் கற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். அதேபோல், மணிரத்னமும் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். “தக் லைஃப்” படத்தில் கமல் ஹாசன், தன்னை எப்படி மணிரத்னத்திடம் ஒப்படைக்கிறார் என்பதை பார்க்க நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். குறிப்பாக, ஒரு மணிரத்னம் படத்தில் ஒரு சீன் என்றால், அந்த சீனில் ஏதாவது ஆக்டிவிட்டி நடந்து கொண்டிருக்கும். இந்த படத்திலும் ஒரு சீன் இருக்கிறது,‌ என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், அந்த சின்ன நிகழ்வில், நான் சமையலறையில் இருக்கும் ஒரு முக்கிய தருணம் அது. அந்தக் கடினமான தருணத்தில் அடுப்பை பற்றவைக்க வேண்டும், மிக்ஸியை ஆன் செய்ய வேண்டும், டயலாக் பேச வேண்டும். எனக்கு இரண்டு கேமராக்கள் பின்தொடர்கின்றன. அதில் ஒரு பாதையை விடக்கூடாது, உரையாடலை மறக்கக்கூடாது, தொடர்ச்சியில் பிழை இருக்கக்கூடாது. அதைப் பற்றி நினைத்தால், ‘வாவ் எனவே கூறத் தோன்றுகிறது என்றார்.

- Advertisement -

Read more

Local News