Tuesday, November 19, 2024

வாழை படம் 30 ஆண்டுகளான அவருடைய வாழ்க்கை‌‌… நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை’. இந்த படம், மாரி செல்வராஜின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரவிருக்கும் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை சென்னை நகரில் Pre Release விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “இந்த படத்தை பார்த்த பிறகு மனதில் மிகவும் பாரமாக இருந்தது. இவ்வளவு நெருக்கமான மற்றும் உருக்கமான விஷயங்களையும் எப்படி தாங்குகிறீர்கள் என்று நான் மாரி செல்வராஜ் sir-கிடம் கேட்டேன். அதற்கு அவர், ’30 வருடங்கள் ஆசுப்பா’ என்று பதிலளித்தார். அந்த 30 வருடங்கள் தான் ‘வாழை’ என்று எனக்குத் தோன்றியது. எதார்த்தம் எப்போதும் அழகாகவே இருக்கும். அந்த எதார்த்தத்தை, அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை வைத்து இவ்வளவு அழகாக ஒரு படமாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சொல்ல என்னுடைய வயது போதாது; நன்றியே சொல்லுகிறேன்” என்று கூறினார்.

தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு படத்தை வழங்கியதற்காக நன்றி. இந்த திரைப்படத்தில் சிறிய குழந்தைகள் பொன் வேல் மற்றும் ராகுல் மிகவும் அருமையாக நடித்துள்ளனர். அவர்கள் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன். இப்படம் ஒரு அற்புதமான படைப்பு. மாரி செல்வராஜ் sir மற்றும் அவரது குழுவிற்கு நன்றி. எல்லாருக்கும் எனது வாழ்த்துகள், நன்றியுடன் என் அன்பை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News