Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷனல் கிரஷ் என்பதுதான். இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் படம் எப்படியும் ஹிட் அடித்து விடுகின்றது.

ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், அவரது நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குநர் சுகுமாறனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே உள்ளது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு நேற்று அதாவது ஜூலை 25ஆம் தேதி வந்தார். அங்கு மிகவும் பிரமாண்டமான துணிக்கடையை திறந்து வைக்க வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா வந்திருந்தார். அப்போது அங்கு அவரைக் காண திரண்டிருந்த ரசிகர்கள் முன்னிலையில் தான் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடனமாடினார். குறிப்பாக புஷ்பா படத்தில் இருந்து ஸ்ரீ வள்ளி பாடலுக்கும், ஏ சாமி பாடலுக்கும் நடனமாடினார். அதேபோல் விஜய் உடன் தமிழில் நடித்திருந்த வாரிசு படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News