Tuesday, October 1, 2024

ரீ ரிலீஸில் கோடிகளை அள்ளிய ‘தும்பாட்’ திரைப்படம்… ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீப காலமாக, சூப்பர் ஹிட் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் ஆகியோரின் பல படங்கள் மீண்டும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. விஜய் – திரிஷா இணைந்து நடித்த “கில்லி” படம் சில மாதங்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 26 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இப்போது, 2018 ஆம் ஆண்டு வெளியான “தும்பாட்” என்ற ஹிந்தி படம், செப்டம்பர் 13 அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 28 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இது இந்திய அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதலிடத்தில் இருக்கிறது என கூறப்படுகிறது.

பாலிவுட்டில் இதுவரை பார்த்திராத ஒரு ஃபேன்டஸி ஹாரர் திரைப்படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படமே ‘தும்பாட்’. இந்த திரைப்படம் இன்றுவரை ‘அண்டர்ரேட்டட்’ என்ற நிலையில் இருந்து வருகிறது. சிறுவயதில் நமக்கு சொல்லித் தரப்படும் ‘பேராசை பெருநஷ்டம்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையைத் தாங்கியது தான் இந்த படம். இந்த படத்தை அற்புதமான கதை திரைக்கதை என இயக்கிருந்தார் இயக்குநர் ரஹி அணில் பர்வே.

- Advertisement -

Read more

Local News