தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏற்கனவே வெற்றி பெற்ற பல படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2012ல் கவுதம் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் சமந்தா, நானி நடிப்பில் வெளியான ஏதோ வெள்ளிப்போயிந்தி மனசு படம் மீண்டும் ரீ ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த படம் கணிசமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்தப் படம் தான் ஒரே நேரத்தில் தமிழில் சமந்தா, ஜீவா நடிக்க நீதானே என் பொன்வசந்தம் என்கிற பெயரில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043880.jpg)