Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரிலீஸ்க்கு முன்னரே வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த கல்கி திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கல்கி திரைப்படம் ஜூலை 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை மக்களுக்கு தெரியப்படுத்த 13 மினி லாரிகளில் பெரிய எல்இடி ஸ்க்ரீன்களை அமைத்து நாட்டில் சுற்றி வர செய்து விளம்பரப்படுத்த, புதிய யுத்தியை படக்குழு கையாண்டுள்ளது. முன்னதாக இப்படத்தித் இடம்பெற்றுள்ள புஜ்ஜி கார்ரை வைத்து இப்படத்தின் ப்ரோமோஷன் நடைப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கல்கி படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் வட அமெரிக்காவில் மட்டும் ரிலீஸ்க்கு முன்பே முன்பதிவில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 12.5 கோடிக்கு மேல் ஆகும். படம் ரிலீஸான பிறகு இந்த வசூல் இன்னும் உயரும் எனப்படுகிறது. இதனால், வட அமெரிக்காவில் வெளியான இந்திய படங்களிலேயே கல்கி 2898 ஏ.டி அதிக வசூல் செய்துள்ளது. இது பாகுபலியின் வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News