Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் தனது 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

ராயன் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நேரத்தில் தனுஷ் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.இதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News