நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான “அந்தே சுந்தரானிகி” படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா, மீண்டும் நானியுடன் இணைந்து புதிய திரைப்படம் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கின்றார். தமிழில் இதற்கு “சூர்யாவின் சனிக்கிழமை” என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த படத்தை “ஆர்.ஆர்.ஆர்” படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்த படம் பான் இந்தியன் படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்படும். 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது, மேலும் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.