Tuesday, November 19, 2024

மற்றொருமுறை சென்சார் செய்யப்பட்ட கோட் திரைப்படம்… வெளியான புது தகவல்! #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தி கோட் திரைப்படத்திற்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. படத்தை ஒரு பக்கா ஆக்ஷன் கமெர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தணிக்கை குழு கோட் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். ஆரம்பத்தில் படத்தின் நேரம் 3 மணி நேரமாக இருந்தது. இப்போது படத்தின் நேர அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அது தற்போது 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 14 நொடிகளாக மாறியுள்ளது. படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்லூபர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News