Tuesday, November 19, 2024

போலீஸ் கதாபாத்திரத்தில் அசத்தும் த்ரிஷா… வெளியானது பிருந்தா வெப் தொடர்! #BRINDA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் அஜித்துடன் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் இருந்து அஜித், த்ரிஷாவின் இருக்கும் போட்டோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கி உள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு கடந்த வாரம் இப்படத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சினிமாவில் பிஸியாக வலம் வரும் த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வபகரா படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும், டோவினோ தாமஸின் ஐடென்டி, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் படத்திலும் கமிட்டாகி உள்ளார். படங்கள் மட்டுமில்லாமல், முதல் முறையாக இணையத் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். ‘பிருந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர், சோனி லிவ் ஓடிடியில் இன்று முதல் பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளில்சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில், த்ரிஷா போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார்.

இந்த இணையத் தொடரில் நடித்தது குறித்து வீடியோவில் பேசி உள்ள நடிகை த்ரிஷா, நான் முதன்முறையாக பிருந்தா என்கிற வெப் தொடரில் நடித்து இருக்கிறேன். இந்த தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என உங்களுக்கு விருப்பமான மொழியில் பார்க்கலாம். க்ரைம் திரில்லர் ஜானரில் சோனி லிவ்வில் இன்று வெளியாகி இந்த வெப் தொடரை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று பேசி உள்ளார்.

- Advertisement -

Read more

Local News