Tuesday, November 19, 2024

நான்கு நாட்கள் ஸ்டூடியோவில் அடிமை போல் இருந்தேன் – ஜி.வி.பிரகாஷ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். 17 வயதில் அந்த படத்துக்கு இசையமைத்தார். வெயில் படத்தில் அவரது இசையை கேட்ட திரையுலகம், இளம் வயதிலேயே இவ்வளவு திறமையுடன் இசையமைத்ததைப் பாராட்டியது.பின்னர் பல படங்களில் தொடர்ந்து இசையமைத்த அவர், செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தின் இசை மிகுந்த க்ளாசிக் என்று பாராட்டப்பட்டது. அதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இது பலரையும் அதிருப்தியடைய செய்தது.

தொடர்ந்து இசையமைத்து வந்த அவர், சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். பல வருடங்களுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் முக்கியமானது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிகுந்த உச்சம் அடைந்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஜி.வி. பிரகாஷ் அளித்த பேட்டி டிரெண்டாகியுள்ளது. அதில், “ஆயிரத்தில் ஒருவன் பட சமயத்தில், என்னை ஸ்டூடியோவில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கு நாட்கள் ஸ்டூடியோவிலேயே இருந்தேன். செல்வராகவனும் அங்கிருந்தார். ‘தயவு செய்து போங்கள், நான் வாசித்து வைக்கிறேன்’ என்றாலும், அவர் கேட்கவில்லை. மயக்கம் என்ன படத்தின் சமயத்திலும் அவர் அப்படித்தான் செய்தார்” என்றார்.

- Advertisement -

Read more

Local News