Tuesday, November 19, 2024

நஷ்டஈடு கேட்டு மஞ்சு வாரியருக்கு நோட்டீஸ் அனுப்பிய நடிகை சீத்தல் தம்பி… எதுக்கா இருக்கும்?…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், தமிழில் ‘அசுரன்’ மற்றும் ‘துணிவு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, ‘விடுதலை 2’, ‘மிஸ்டர் எக்ஸ்’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது, ‘புட்டேஜ்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சைஜு ஸ்ரீதரன் இயக்கிய இப்படத்தில், மஞ்சு வாரியருடன் இணைந்து விஷக் நாயர், காயத்ரி அசோக், சீத்தல் தம்பி ஆகியோர் நடித்துள்ளனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு ‘புட்டேஜ்’ படத்தில் நடித்துள்ள சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், மஞ்சு வாரியரின் ‘மூவி பக்கெட்’ நிறுவனம் தயாரித்த ‘புட்டேஜ்’ படத்தின் படப்பிடிப்பு போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் நடத்தியதால், தன்னிற்கு காயம் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ரூ.1.80 லட்சம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பல லட்சங்கள் செலவானதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News