வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடிப்பதற்கு அவர் தயாராகி வருகிறார். விஜய் தற்போது ஒரு புதிய சொகுசு கார் வாங்கி இருப்பதாக அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் வீட்டில் இருந்து அந்த கார் வெளியே வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கார் லெக்சஸ் எல்எம் சீரிஸ் மாடலாகும். எலக்ட்ரிக் வகையை சேர்ந்த இந்த சொகுசுகாரின் விலை 2.5 கோடி என்று கூறப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த காரில் பல ஆடம்பரமான வசதிகள் இடம் பெற்றுள்ளதாம்.