பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக்கான், தனது நடிப்பில் உருவான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரூ.1000 கோடி வசூல் சாதனைக்கு மேல் சென்று வரலாறு படைத்துள்ளன. எனினும், தனது நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் பல தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தனது தோல்விகளை பற்றி பேசுகையில் அவர், தோல்விகளுக்காக ஒருபோதும் அழக்கூடாது. தோல்விகளை சுயபரிசோதனை செய்யும் வாய்ப்பாக பார்க்க வேண்டும். எனது வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை நினைக்கும் போது சில நேரங்களில் வெறுப்பாக உணர்ந்தேன். நான் பாத்ரூமில் தனியாக அமர்ந்து கதறி அழுததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் யாரிடமும் வெளிகாட்டியதில்லை என்றுள்ளார்.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக செயல்படவில்லை என்பதை நம்ப வேண்டும். உங்கள் வாழ்க்கையில் விரக்தி இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டும் தவறு நடக்கிறது என்று எண்ணக்கூடாது. வாழ்க்கை தனது போக்கில் செல்லும். அது தன் செயல்களை செய்யும், அதற்காக வாழ்க்கையை குறை கூறவேண்டியதில்லை,” என உணர்ச்சி பரவலாக தெரிவித்தார்.