Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

துப்பாக்கி படத்துல கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியா? வைரலாகும் விஜய்யின் காமெடி க்ளிப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காமெடி காட்சியின் வீடியோ கிளிப் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில், விஜய் ஒரு காவல் நிலையத்தில் அமர்ந்து, அங்குள்ள காவலர்களிடம் கவுண்டமணி, செந்திலின் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடியை ஹிந்தியில் விவரிக்கிறார்; அதை கேட்டுக் கொண்டே காவலர்கள் குதுகலமாக சிரிக்கின்றனர். இந்த காட்சி படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் சுற்றியுள்ளவர்களை சிரிக்கச் செய்தாரா என்றது தெளிவாகத் தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News