Tuesday, November 19, 2024

தளபதி 69 மிஸ்ஸே ஆகாது… த.வெ.க மாநாட்டிற்கும் சாமர்த்தியமாக ஸ்கெட்ச் போட்ட நடிகர் விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை நிலையில், தளபதி 69-வது படம் டிராப் ஆனதாக தகவல்கள் பரவியதை கண்டு அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அவையெல்லாம் வதந்தி தான், நடிகர் விஜய் 69-வது படத்தை முடித்து விட்டு தான் அரசியலுக்கு வருவார் என்றும் உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் “கோட்” படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு தனது அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். அதன் பின்னர் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் தான் நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். கமல்ஹாசன் படம் மிஸ் ஆனதால், விஜய் படத்தை வெறித்தனமாக உருவாக்கும் முயற்சியில் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை எச். வினோத் செய்து வருவதாக கூறுகின்றனர். 6 மாதத்திற்குள் அந்த படத்தை முடித்து விட வேண்டும் என்றும் நடிகர் விஜய் டைம் லைன் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

செப்டம்பர் 5-ம் தேதி கோட் படம் வெளியான பின்னர் செப்டம்பர் 21-ம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் நடத்தப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளிலேயே தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News