Monday, November 18, 2024

தனது குழந்தைகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நீண்ட காலமாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களின் இரண்டாவது திருமண நாளை ஹாங்காங்கில் கொண்டாடினர்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விக்கி மற்றும் நயன், அவர்கள் ஒருசேர வெளியே செல்லும் வீடியோக்கள், குழந்தைகளுடன் செலவிடும் தருணங்கள் உள்ளிட்ட பல வீடியோ, புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. அதேபோல், நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பின்னர், தங்களது இரு மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.

இந்நிலையில், இன்று மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர்கள் இரு குழந்தைகளும் ஒரு அறையின் கதவை திறக்க முயற்சிப்பது காணப்படுகிறது. கதவை திறக்க முடியாத நிலையில், தங்களது தந்தை விக்கியை, “விக்கி அப்பா, விக்கி அப்பா” என்று அழைக்கும் மழலை குரல் மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News