Saturday, September 14, 2024

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக சிம்பு… வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி! #ThugLife

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் புதிய படம் ‛தக் லைஃப்’. இந்த படத்தின் மூலம், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

‛தக் லைஃப்’ படத்தில், கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு, சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது, மீண்டும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படத்தை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News