நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மாநாட்டிற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்கள் எக்காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. சாலையில் வரும்போது மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலைகளில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. கிணறு மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் கவனமாக வரவேண்டும். மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பேருந்து மற்றும் வேன்களில் வருபவர்கள் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவுரைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் விதித்த கட்டுப்பாடுகள்! #TVK
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more