நடிகர் மன்சூர் அலிகான், 90-களிலும் 2000-ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் வெளியிடும் கருத்துகள் சர்ச்சைக்கு காரணமாக இருந்து வந்தன.
தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைக்கிறார்.
இதில் நாயகியாக திரிஷா நடிக்க, மன்சூர் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலாவுகின்றன. கடந்த வாரம் முதல் அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம். மேலும், சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.