Tuesday, November 19, 2024

சிம்புவா இது? உடல் எடையை குறைத்த நடிகர் சிம்பு… வைரல் கிளிக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, கால்ஷீட் கொடுத்தவிட்டு படப்பிடிப்புக்கு வருவது இல்லை என பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார் பல விமர்சனங்களை தகர்த்தெறியும் விதமாக தனது உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்ட வீடியோக்களை அட் மேன் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பலருக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் உடல் எடை குறைத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவர் பட்ட கஷ்டத்திற்கு சினிமா தந்த பரிசு தான் மாநாடு படத்தின் வெற்றி. வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல படங்கள் டீசன்ட் வெற்றியை அவருக்கு கொடுத்தது. அதை தொடர்ந்து கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய நாற்பத்தி எட்டாவது படத்தில் இணைந்தார்.

மேலும் கமலஹாசனின் தக் லைப் படத்திலும் சிம்பு நடிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் தன்னுடைய 48வது படத்திற்காக நீண்ட முடியை வளர்த்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவர் இந்த படத்திற்காக உடல் எடையை வேற குறைத்து இருக்கிறார் என கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சிம்புவின் இந்த உடல் எடை குறைப்பு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News