Tuesday, December 31, 2024

சலார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் தவறிவிட்டேன்… நடிகை மாளவிகா மோகனன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் ‛பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது, தெலுங்கில் ‛ராஜா சாப்’ என்ற படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், “நான் தெலுங்கில் வெளிவந்த ‛பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதனால் பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அந்த நேரத்தில் ‛சலார்’ படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் பிரசாந்த் நீல் எனக்கு ஏற்படுத்தித் தந்தார்.

ஆனால், சில காரணங்களால் ‛சலார்’ படத்தில் நடிக்க முடியவில்லை. தற்போது ‛ராஜா சாப்’ படத்தின் மூலம் என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News