Tuesday, October 1, 2024

கேம் சேன்ஜர் படத்தின் Raa Macha Macha பாடலுக்கு நடனமாடி Vibe செய்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ராம்சரண், ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் “கேம் சேஞ்சர்” படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இப்படம் டிசம்பர் 20 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரண் நடிப்பில் உருவான “கேம் சேஞ்சர்” படத்திற்கு இசையமைத்தவர் தமன். அவரின் இசையில் வெளிவந்த முதல் சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது “ரா மச்சா மச்சா” என்ற இரண்டாவது சிங்கிளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம், ஷங்கர், ராம்சரண் மற்றும் படக்குழுவினரின் மெனக்கெடல்கள் ஆகியவை லிரிக் வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளது. நாகாஷ் ஆசிஷ் பாடியுள்ள பாடலுக்கு ஆனந்த ஸ்ரீராம் வரிகளை எழுதியுள்ளார், கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ளார். கியாரா அத்வானி, ராம்சரணின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “ரா மச்சா மச்சா” பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் எஸ்ஜே சூர்யா இந்த பாடலுக்கு வைஃப் செய்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News