Monday, January 13, 2025

கேம் சேஞ்சர் படத்தில் கட் செய்யப்பட்ட டூயட் பாடல்… என்ன காரணம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம்சரண், கியாரா அத்வானியின் டூயட் பாடலாக உருவாகியுள்ள Naanaa Hyraanaa பாடல் நியூசிலாந்தில் உள்ள விதவிதமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டு உள்ளது. யு-டியூப்பில் இந்த பாடல் வெளியான போது இந்த பாடல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்ல இந்திய சினிமாவில் முதல் முதலாக அகச்சிவப்பு கதிர் கேமராவினால் இந்த பாடல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த பாடல் சிலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த படத்தில் இணைக்கப்படவில்லை என்றும் வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் இந்த பாடல் படத்தில் இடம்பெறும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News