ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும், அனிருத் இசையமைத்திருக்கும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’.
இந்த படத்தின் ஒரு முக்கியமான அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள பூஜா ஹெக்டே தொடர்பான அப்டேட்டாக இருக்கலாம். அமாவாசை தினமான இன்று முதல் இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடங்கியுள்ளன, மேலும் தொடர்ச்சியாக வெளியாகலாம் என்பது தெரிகிறது.

அடுத்த மாதமான மார்ச் 14ம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை விடுமுறையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.