Monday, November 18, 2024

கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம் முடிந்ததா? இது ரீல்லா அல்லது ரியலா? வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2017ல் தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ திரைப்படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷன் திரைத்துறைக்கு அறிமுகமானார். அவரது பெற்றோர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான பிரியதர்ஷன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சி ஆவார். கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்திலும் நடித்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன் தனது முதல் படமான ‘ஹலோ’விற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். ஹ்ருதயம் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார், அவருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் குழுவும் உள்ளது.

இந்த நிலையில், ஒரு சின்னத்திரை நடிகருடன் கல்யாணி பிரியதர்ஷன் ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், அந்த சின்னத்திரை நடிகருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகவும், இது அவரது இரண்டாவது திருமணம் என்று கூறப்பட்டது. இதனால் கல்யாணி பிரியதர்ஷன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒரு நகைக்கடையின் விளம்பரத்திற்காக படமாக்கப்பட்டதாகவும், இருவரும் அந்த விளம்பரத்தில் நடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News