Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கறார்றாக செல்ஃபிக்கு நோ சொன்ன டாப்ஸி… என்ன தான் ஆச்சு? வைரல் வீடியோ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது “ஆடுகளம்”. இந்த படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது. “ஆடுகளம்” மூலம் டாப்ஸி கதாநாயகியாக அறிமுகமானார். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக அவர் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். இதனால், தனது முதல் படத்திலேயே கோலிவுட்டின் கவனத்தை பெற்ற டாப்ஸிக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

இதற்கிடையில், டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த முன்னாள் பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் போவை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக காதலித்துவந்த இருவரும் சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், டாப்ஸியை தொடர்புடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. பொதுவெளியில் சென்றுகொண்டிருக்கும் அவரிடம், ஒரு ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்கிறார். ஆனால், டாப்ஸி கடுமையாக “இல்லை” என பதிலளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவியுள்ளது.

- Advertisement -

Read more

Local News