வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவரது இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஓடிடி ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர்கள் மற்றும் போலீஸ் க்ரைம் வெப் சீரிஸ்களுக்கு மத்தியில் அழகாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரின் அழகை ரம்மியமாக காட்டி தற்கொலை எண்ணத்துக்கு எதிரான அற்புத படைப்பாக பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார்.
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வரவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒரு க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலின் சிலநொடிகளை கேட்டதுமே ரசிகர்கள் நெகிழ்ந்து அவரை கொண்டாடி வருகின்றனர்.