மலையாள நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட 100 படங்களை தாண்டி நடித்துவிட்டார். மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கிய பிரித்விராஜ், தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்பிரான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் தனது உதவி இயக்குனரின் பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் பிரித்விராஜ். உதவியாளருக்கு பரிசாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் கேக் வெட்டி ஊட்டிய பிரித்விராஜ், “போய் அடுத்த காட்சியை நீயே எடு மோனே” என்று உற்சாகப்படுத்தி அனுமதி கொடுத்தார்.
இது குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுபற்றி படக்குழுவினர் கூறும்போது, பிறந்தநாளில் உதவி இயக்குனர்களுக்கு ஒரு காட்சியை படமாக்க சொல்லி பரிசு கொடுப்பது பிரித்விராஜ் வாடிக்கையாகவே வைத்துள்ளார் என்று கூறினர்.