Monday, October 7, 2024

இன்ஸ்டாகிராமில் லவ் ஸ்டோரி… ஒரு பக்கம் பிக்பாஸ் என்ட்ரி… நடிகை அன்ஷிதா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “செல்லம்மா” தொடரில் ஹீரோயினாக நடித்த அன்ஷிதா, சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவடைந்த நிலையில், “குக் வித் கோமாளி” சீசன் 5-ல் கோமாளியாக களமிறங்கினார். அன்ஷிதாவிற்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது சோஷியல் மீடியா பதிவுகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கிடையில், அன்ஷிதா ஒருவருடன் கையை கோர்த்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “புயலாலும் நமது உறவை அசைக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இதனால், அந்த நபர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், அது “செல்லம்மா” தொடரில் ஹீரோவாக நடித்த அன்வர் தான் என்றும் கமெண்ட் செய்கிறார்கள்.

தற்போது அன்ஷிதா பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News