நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களை திட்டமிட்டு வருகின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000048866-683x1024.jpg)
படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக் வீடியோவாக முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றைய தினம் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளது. இதை ஒட்டிய பிரமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். பிரஷாந்த் மற்றும் பிரபுதேவா உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.