Tuesday, November 19, 2024

இந்த படம் சிரிக்கவும், கைத்தட்டவும், அழுகவும் செய்வதற்கு, தயாராக இருங்கள்… வாழை படத்தை பார்த்து வாழ்த்திய நடிகர் தனுஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை’ எனும் படத்தை இயக்கியுள்ளார், இதில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் முக்கியமாக நடித்துள்ளன.

கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மாரி செல்வராஜ்-ன் இளமை பருவத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல திரைப் பிரபலங்கள் இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள நிலையில், இன்று திரைக்கு வந்த ‘வாழை’ திரைப்படத்தை நடிகர் தனுஷ் பார்த்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்துப் பதிவு செய்துள்ளார். அதன்படி, இந்த படம் சிரிக்கவும், கைத்தட்டவும், அழுவதற்கு தயாராக இருங்கள். உங்களைச் சிந்திக்க வைக்கும் உலகில் நுழைய தயாராக இருங்கள். ‘வாழை’ உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் அழகான படமாக உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News